Site icon Colourmedia News

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா பதிவுகள்

விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர். தீர்த்தக்கேணியின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.

மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச் செய்யப்பெற்றது. தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள அடியவர்களோடு சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளி பேணி  தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நல்லூர் தேவஸ்தானத்தால் இந்நிகழ்வுகள் பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Exit mobile version