Site icon Colourmedia News

மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 1,564 சந்தேக நபர்கள் கைது

மேல் மாகாணத்தில் நேற்று (18) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 1,564 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 771 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் 792 பேர் துஷ்பிரயோக வழக்குகளின் சந்தேகநபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தினுள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2093 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version