இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரத்துடன் கூடியதாக மாடி வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. களனி, கொழும்பு, ஜயவர்தனபுர, மொரட்டுவ மற்றும் அழகியற்கலை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வீடுகளின்றி பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபை செயலாளர் அடங்கிய குழு ஆராய்ந்துள்ளது