மிஹிந்தலை ராஜ மகா விகாரையின் பிரதமர் சங்க நாயக்கர் வணக்கத்துக்குரிய தர்மரெட்ண தேரர் பரபரப்பான கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார். நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிக்குமார் எவருக்கும் பொது மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அவரது கோரிக்கை. இந்தக் கோரிக்கை சர்ச்சைக்குரிய ஒன்றாகக் காணப்பட்டாலும், அதன் பின்னணியிலுள்ள உண்மைகள் ஆராயப்பட வேண்டியவை.
ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது தவறானது என்ற கருத்தின் அடிப்படையில் மட்டும் இந்தக் கருத்தை அவர் முன்வைக்கவில்லை. பதிலாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு சென்ற பிக்குகள் பௌத்த சாசனத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எதனையும் செய்யவில்லை. பதிலாக தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்வதிலும் அனுபவி பதிலுமே அவரும் நாட்டம் காட்டினார் என்பது அவரது குற்றச்சாட்டு
thanks thinakkural