Site icon Colourmedia News

டிக்டொக் உட்பட 59 செயலிகள் இந்தியாவில் தடை

இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதால்” இந்த 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version