Site icon Colourmedia News

பொதுநலவாய விளையாட்டு – அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

இப்போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இன்று ஆறாவது நாளாகும்.

இதுவரையில் 41 தங்கப்பதங்கங்களையும் 34 வெள்ளிப்பதக்கங்களையும் 34 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 109 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா முன்னிலை வகிக்கின்றது.

இங்கிலாந்து தங்கம் 23 , வெள்ளி 27, வெண்கலப்பதக்கங்கள் 20 பெற்று மொத்தமாக 70 பதங்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா 11 தங்கப்பதக்கங்களையும் 4 வெள்ளிப்பதக்கங்களையும் 5 வெண்கலப்பதக்களுடன் மொத்தமாக 20 பதக்கங்களை பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. இவ் விளையாட்டு நிகழ்வில் இலங்கை 21 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version