உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகம் முழுவதும் 4,137,226 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 435,977 ஆக உயர்ந்துள்ளது.