Site icon Colourmedia News

சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள் அகற்றப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்காக பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த நடவடிக்கையை கண்காணிப்பதற்கு, அனைத்து பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Exit mobile version