Site icon Colourmedia News

எதிர்வரும் வாரம் அளவில் சகல மாவட்டங்களுக்கும் வாக்கு அட்டைகளை விநியோகிக்கம் பணி

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான மாதிரி வாக்களிப்புக்கள் 15 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வார இறுதியில் இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு மாதிரி வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மாத்தளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தறை, காலி, மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, களுத்துறை, புத்தளம், மன்னார், கொழும்பு, கம்பஹா, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மாதிரி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

Exit mobile version