மொனராகலை – படல்கும்பர பகுதியில் நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற 7 வயது சிறுவன் ஒருவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப உறுப்பனர்களுடன் நீராட சென்ற சிறுவன் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்துள்ளார் இந்நிலையில் சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவரது தமையனும் நீரில் இறங்கியுள்ளார். இந்நிலையில் சிறுவர்களின் தந்தை மூத்த மகனை காப்பாற்றிய நிலையில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்