தமிழகத்தில் இன்று 1149 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 809 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 13,993 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது.
1149 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 70.40 சதவீதத் தொற்று சென்னையில் (809) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 22,333 -ல் சென்னையில் மட்டும் 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.27 சதவீதம் ஆகும்.