Site icon Colourmedia News

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது.

ரம்பொடை, வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் நேற்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து நோர்வூட் மைதானம் நோக்கி பிற்பகல் 2 மணியளவில் சடலம் எடுத்து செல்லப்படும்.

அங்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இறுதிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நோர்வூட்டில் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்டளனாவர்களே மைதான வளாகத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவம், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Exit mobile version