912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் “மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை” மற்றும் “அன்னையர் தினம்” ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்
உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை’ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது..
குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது..
இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..
பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு.
அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது