மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100 பேருடன் உரையாட முடியும். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன் மூலம் கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்ட சேவைகளுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடிவு செய்துள்ளது. இரு சேவைகளிலும் தற்சமயம் ஒரே சமயத்தில் 100 பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.