நீர்கொழும்பு பழைய சிலாப வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நீர்கொழும்பு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பிரிவில் சேவையாற்றும் 33 வயதுடைய ஷாமிக்க தென்னகோன் (70074) போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவர்.
நேற்று இரவு 10 மணியளவில் பெரியமுள்ளயில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கட்டிடம் ஒன்றில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா