Site icon Colourmedia News

உழைப்பாளர் தினத்தன்று சிஎஸ்கே வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 ஆண்டு தோனி, பூனே ஆடுகளத்தின் பராமரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 பரிசு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் தோனியின் செயலால் நெகிழ்ந்த ஊழியர்களின் வீடியோவை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version