Site icon Colourmedia News

முப்படைகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்

நாட்டில் நிலவும் மோச­மான கால­நி­லையால் நாட­ ளா­விய ரீதியில் 20 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான மக் கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பொது­மக்­களின் உட­மை­களும் சேத­ம­டைந்­து­ள்­ளன. இந்­நி­லையில் முப்­ப­டை­களின் உத­வி­யுடன் பொது­மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக

முன்­னெ­டுக்­கு­மாறும் மக்­க­ளுக்கு உரிய நிவா­ரண உத­வி­களை வழங்­கு­மாறும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

மூன்று நாட்கள் விஜயம் மேற்­கொண்டு தென்­கொ­ரி­யா­விற்கு சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் நிலை­மை­களை கேட்­ட­றிந்த பின்னர் தென் கொரி­யாவில் இருந்து அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மற்றும் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஆகி­யோ­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இந்தப் பணிப்­பு­ரையை வழங்­கி­யுள்ளார்.

மேலும் பாது­காப்பு படை­களின் பூரண உத­வி­களை எந்த நேரத்­திலும் பயன்­ப­டுத்­திக்­கொள்ளும் ஏற்­பா­டு­களை செய்­யு­மாறும், பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை மீட்கும் நட­வ­டிக்­கை­களை பாது­காப்பு படை­யினைக் கொண்டு முன்­னெ­டுக்­கு­மாறும் குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­போன்று சீரற்ற கால­நி­லை­யினால் கடலில் சிக்­கி­யுள்ள மீன­வர்­களை தேடும் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறும், ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு ஆரம்ப உத­வி­யாக 10 ஆயிரம் ரூபா நிதி­யு­தவி வழங்­கு­மாறும், நிவா­ரண உத­வி­களை உட­ன­டி­யாக வழங்­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அனர்த்­தத்தில் சிக்­கி­யுள்ள மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக நிவா­ரண மற்றும் சுகா­தார உத­வி­களை வழங்க மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் முழு­மை­யாக பாதிப்­பு­களை எதிர்­கொண்ட மக்­க­ளுக்கு முதற்­கட்ட நிவா­ர­ண­மாக 10 ஆயிரம் ரூபாவை வழங்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யுமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version