Site icon Colourmedia News

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா?

சீனாவின் மத்திய நகரமான வுஹானிலுள்ள கடலுணவு விற்பனை சந்தையிலிருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடித்தான் கிடக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல, சீனாவில் வுஹான் நகரத்திலுள்ள Wuhan Institute of Virology ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பொக்ஸ் நியூஸ்’ ( Fox News ) செய்திச் சேவை பிரத்தியேக செய்தியொன்றை வெளியிட்டு, உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்காவும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை வைத்தியசாலையில் கிடக்கச் செய்துள்ள இவ் வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிலும் எழுந்துள்ள நிலையில் எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரான்ஸ் பேராசிரியர் லூக் மோன்தக்னேர் ( Luc Montagnier ) தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் எனும் நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான பேராசிரியர் பிரான்ஸிலுள்ள CNews தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

வுஹான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் 2,000 ஆண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும், கொரோனா வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து வுஹான் சந்தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லையென்றும் , இது ஒரு நல்ல புராணக்கதை, அது சாத்தியமற்றதென்றும் கூறினார்.

இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ள அமெரிக்காவும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version