Site icon Colourmedia News

மீண்டும் வர வாய்ப்புள்ளது.. சீனாவை மீண்டும் கொரோனா தாக்கலாம்.. கவனம்.. ஜி ஜிங்பிங் எச்சரிக்கை!

சீன அதிபர் ஜி ஜிங்பிங் கொரோனா பற்றிய கூட்டத்தின் போது சீனாவின் தீவிரமான செயல்பாடு மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் மீண்டும் அங்கு கொரோனா தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சீனாவில்தான் உலகிலேயே முதல் நபர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானதோடு நாடு முழுவதும் 81,865 பேர் இவ் வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3335 பேர் பலியாகி இருந்த அதேவளை, சீனாவில் நேற்று கொரோனா காரணமாக இரண்டு பேர் பலியானார்கள். சீனா மிக வேகமாக தன் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தி உள்ளதாகவும், 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் 1160 பேர் மாத்திரமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக அங்கு உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அங்கு அதிகமான வெளிநாட்டு நபர்கள் மூலமே தற்போது கொரோனா பரவி வருவதாகவும், அதாவது வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வரும் நபர்கள் மூலம்தான் தற்போது சீனாவில் கொரோனா பரவி வருகிறது. மாறாக உள்நாட்டில் பெரிய அளவில் கொரோனா பரவவில்லை என்றும் அவர் அக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில் மீண்டும் இவ் வைரஸ் ஏற்படுமானால் அதன் வீரியம் அதிகமாக காணப்படும் என்றும் அதனை தங்களால் எதிர் கொள்வது கடினமாக இருக்கும் என்று தெரிவித்த அவர் வெளிநாட்டுப் பயணிகளை தனித்தனியாக கண்கினிக்க வேண்டும் என்றும் தம் பொருளாதார நிலையை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தன் உரையில் தெரிவித்தார்.

Exit mobile version