புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் மரித்தததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.
இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
ஆனால்,
புதிய ஏற்பாடு காலத்தில், இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சி, அந்நாட்களில் தலைமை குருவாய் இருந்த காய்பாவின் மாமனாரான அன்னா அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
மக்கள் எல்லாருக்காகவும், மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியாக, சிலுவையில் பலியானார். இதனை தான் மக்கள் அனைவரும் புனித வெள்ளி என்று அனுசரிக்கின்றனர்.