Site icon Colourmedia News

வியாபார நிலையம் உடைத்து திருட்டு

negombo colourmedia

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஊடரங்கு சட்ட காலவேளையில் ஓட்டமாவடி தபால் நிலைய வீதியிலுள்ள சில்லறை வியாபார நிலையம், ஒயில் வியாபார நிலையம் என்பவற்றினை உடைத்து சில்லறை பொருட்கள் மற்றும் ஒயில் வகைகள், பணம் என்பவற்றுடன் வியாபார நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை உடைத்து அதன் உதிரிப்பாகங்களையும் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

Exit mobile version