Site icon Colourmedia News

டிப்ளோமா மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை பொறுப்பேற்கவுள்ள அரசாங்கம்

2020ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு நோக்கங்களோடு தேசிய கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்தி வரும் டிப்ளோமா மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version