Site icon Colourmedia News

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் வழமை போல் பயன்படுத்த முடியாது.

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது பேஸ்புக் கணக்கினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.

புதிய விதிமுறை பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளுக்கும் பொருந்தும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது பேஸ்புக் கணக்கை கொண்டு சைன் இன் செய்ய வேண்டி இருக்கும். பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். தற்சமயம் மெசஞ்சர் சேவையை பேஸ்புக் கணக்கு மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் பேஸ்புக் கணக்கு இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய மாற்றம் காரணமாக சில வாடிக்கையாளர்கள் தங்களது ரெடிட் கணக்கில் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தனர். இவர்கள் செயலியில் ஏதேனும் பிழை அல்லது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். பேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version