Site icon Colourmedia News

ஜனவரி 1 முதல் அரசாங்கம் வழங்கும் பாடல்களையே பயணிகள் பேருந்தில் ஒலிபரப்ப வேண்டும்- புதிய கட்டுப்பாடு

பயணிகள் பேருந்துக்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. 2020 ஜனவரி 1 முதல் இந்த நடைமுறையின்படியே பாடல்கள் ஒலிபரப்ப வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் உரத்த இசை இசைக்கப்படுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம் பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 புகார்களைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் மியூசிக் சிடி அல்லது அவர்கள் விரும்பும் கசட்டுகளை இயக்க தடை விதிக்கப்படும். பேருந்துகளில் வானொலி ஒலிபரப்பிற்கும் ஒலி வரம்பும் விதிக்கப்படும்.

Exit mobile version