ஒரு கோடியே ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 263 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று வரையில் விநியோகிக்கப்பட்டிருப்தாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக தினத்திற்கு அமைவாக பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடிந்ததாக தபால் திணைக்களத்தின் செயற்பாட்டு பிரிவின் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையையும் கருத்தில் கொள்ளாது இவற்றை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்படும். இதன் பின்னர் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து தபால் அலுவலகங்களில் தமது உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.