Site icon Colourmedia News

மூன்றாவது போட்டியிலேயே அபராதம் விதிக்கப்பட்ட இலங்கை வீரர்!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (25) ஐம்பதாவது ஓவரில் தசுன் ஷானக பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டாவது நாள் போட்டி முடிவின் பின் தனது தவறை தசுன் ஒத்துக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கான கொடுப்பனவில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தனிப்பட்ட புள்ளிகளில் மூன்று மறை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மேலும் ஒரு மறை புள்ளியை அவர் பெறுவாராகில் அவர் விளையாட்டில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Exit mobile version