Site icon Colourmedia News

நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் இன்று அதிகாலை வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது.

இன்று அதிகாலை புத்தளம்- கொழும்பு பிரதான வீதியில் நீர்கொழும்பு பெரியமுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் வியோகிக்கும் வாடகை வாகன சேவை வழங்கும் (புஸ்பா டிரான்ஸ்போர்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு லொரிகளுக்கு தீ வைத்து கொளுத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளார்.

இச் சம்பவம் தொடர்பாக இன்று காலை வெளியிட்ட CCTV காணொளி ஊடாக நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வசிக்கும் கமிது லக்கமால்(வயது41) எனப்படும் சந்தேக நபரை புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிக மதுபோதை காரணமாக இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version