நீர்கொழும்பு- கொழும்பு பிரதான வீதியில் பெரியமுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் வியோகிக்கும் வாடகை வாகன சேவை வழங்கும்(புஸ்பா டிரான்ஸ்போர்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு லொரிகளுக்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீவைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக இவ் வாகன உரிமையாளரின் சகோதரர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அதிகாலை 1.45 மணியளவில் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தமது வீட்டின் கதவை தட்டி வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக தெரிவித்தார். அவ் வேலை நாம் பிரதேச வாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம் அங்கிருந்த சிலர் தீயணைப்பு படையினருக்கு அறிவித்ததாக தெரிவித்தனர் இருப்பினும் அவர்கள் வரவில்லை வீதியில் சென்ற விமானப்படை வீரர்கள் தீயை அணைக்க உதவி செய்தனர் இரு வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களே இவ்வாறு தீயில் எறிந்துள்ளமையால் எவரேனும் தீவைத்திருக்கலாம் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றும் சாரதி ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து லைட்டர் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.