தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் 2 ஆம் நிலைத்தலைவராக செயற்பட்ட நௌப்பர் மௌலவி என்பவரின் மகனான அபு அஸாம் என அறியப்படும் மொஹமட் நௌப்பர் அப்துல்லா என்ற 16 வயது சிறுவன் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
சந்தேகத்துக்குரியவரை இன்றைய தினம் அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அம்பாறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய அம்பாறை கெக்குணகொல்ல – அரக்யால பகுதியில் வைத்து, அம்பாறை காவல்துறை நிலைய அதிகாரிகள் குழுவினரால் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகத்துக்குரியவர், சஹ்ரானின் நுவரெலியாவில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டதன் பின்னர், காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் வழங்கியபோது பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.