கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை தொடர்பில் பலரதும் அவதானம் விழுந்துள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் யானை கொடுமைப்படுத்தபடுவாதாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் டிகிரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும், தவறான சித்தரிப்புகளை மேற்கொள்ளவதாகவும் குறிப்பிட்டு வளர்ப்பு யானைகள் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி பண்டார கருணாரத்னவும் , டிகிரி யானையின் உரிமையாளர் எல்.எல்.திலகரத்னவும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிகிரி யானை குறித்து மேலும் தெரியவருவதாவது,
டிகிரி யானைக்கு தற்போது 70 வயது, இது பார்ப்பதற்கு நோயால் பாதிக்கப்பட்டது போலவும் , உடல் மெலிந்த நிலையிலும் ,சோர்வுற்ற நிலையிலும் , மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றமையால் இந்த யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமை குறித்து பலரும் எதிர்ப்பை தெரிவித்து வரலாயினர்.
ஆனால் இந்த எதிர்ப்புகளை புறக்கணிக்கும் டிகிரியின் உரிமையாளர், யானையை நேர்த்தி கடனுக்காக , கண்டி விஷ்ணு ஆலயத்தின் மூன்றாவது ரந்தோலி பெரஹரவுக்கு மாத்திரமே பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுவும் இந்த யானை தொடர்பான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், வைத்தியரின் அனுமதியையும் பெற்றதன் பின்னரே யானை இவ்வாறு ஊர்வலத்தில் ஈடுப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் பெரஹரவின் பின்னர் நோய்வாய்ப்பட்ட டிகிரி யானையை குணப்படுத்தி கொடுக்குமாறு தெரிவித்தும், இவ்வாறு யானை குணமடைந்தால் அதனை ரந்தோலி பெரஹெராவில் செல்ல விடுவதாகவும் தான் நேர்த்திகடன் செய்திருந்தமையால். தற்போது யானை அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளது. இதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவே ஒரு நாள் மாத்திரம் யானையை ஊர்வலத்தில் செல்லவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக பல வைத்திய பரிசோதனைகளை செய்து அனுமதிப் பெற்றுக் கொண்டதன் பின்னரே டிகிரி யானைக்கு பெரஹராலில் செல்ல அனுமதி கிடைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.