Site icon Colourmedia News

பொதுஜன முன்னணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்படவுள்ளது….

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்படவுள்ளது.

விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் அங்கம் வகிக்கின்ற சிறிய கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணி உருவாக்கத்திற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காலை 9.30க்கு கையெழுத்திடப்பட உள்ளது.

நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்காக சிறிலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியது.

அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version