Site icon Colourmedia News

தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவு – அடுத்த வாரம் அமைச்சரவையில் தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவு ஒரு அடுத்த வாரம் அமைச்சரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிதியை மலையக அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால் இந்த கொடுப்பனவை உரிய முறையில் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இதற்கமைவாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இதற்குரிய பணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.