போதைப்பொருளை வைத்திருந்தமைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் மரணித்துள்ளார்.
தாம் ஐஸ் என்ற போதைப்பொருள் பக்கற் ஒன்றை விழுங்கிவிட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கைதானவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர்.